அருவிகளில் வெள்ளப்பெருக்கு: களைகட்டும் குற்றாலம்

கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கி உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தண்ணீர் வரத்து சிறப்பாக இருந்தது. இதனால் சனிக்கிழமை முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து குற்றாலம் களை கட்டியுள்ளது. மேலும் கடந்த இரு தினங்களாக அங்கு சாரல் மழையும் பெய்து வருகிறது. படம்: தகவல் ஊடகம்