சாக்லெட் வியாபாரி வங்கிக் கணக்கில் ரூ.18 கோடி பணம்

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சாக்லெட் கடை நடத்தி வருபவரின் வங்கிக் கணக்கில் ரூ.18 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வருமான வரித்துறை யினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கும் தன் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ. 18 கோடி பணத்துக்கும் எந்த சம் பந்தமும் இல்லை என்றும் சாக்லெட் வியாபாரி விசாரணை யின்போது கூறியுள்ளார். கிஷோர் லால், சிறிய குடோன் ஒன்றில் சாக்லேட் வகை இனிப்புப் பொருட்களைச் சேர்த்து வைத்து, வீடுவீடாகச் சென்று சாக்லெட் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கிஷோரின் தினசரி வருமானத்துடன் ஒப் பிடும்போது அவரது வங்கிக் கணக்கில் ரூ.18,14,98,815 பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாக்லேட் வியாபாரி கிஷோர் லாலை, 30, விளக்கமளிக்குமாறு கடந்த மே 25ஆம் தேதி ஆட்டோ நகர் வருமான வரித்துறை அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பினர். இதற்கிடையே அகமதாபாத் தைச் சேர்ந்த வங்கி ஒன்று விஜயவாடாவில் அதன் ஒரு கிளையைத் துவங்கியது. அதில் ‘ஒன் டவுன்’ பகுதியைச் சேர்ந்த பல குறுந்தொழில் செய்யும் வியாபாரிகள் கணக்கு வைத் துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கிஷோர் லாலின் வங்கிக் கணக்கில் மும்பையில் இருந்து ரூ.18 கோடி வரை பணப்பரிவர்த்தனை நடைபெற்றது கிஷோருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வருமான வரித்துறையை நாடிய கிஷோர், தனது வங்கிக் கணக்கில் அவ் வளவு பணம் வருவதற்கு வாய்ப் பில்லை என புகார் அளித்துள்ளார். வங்கியின் சிசிடிவி பதிவுகளைப் பெற்றுள்ள வருமான வரித்துறை யினர் இவ்விவகாரம் தொடர்பாக கிஷோர் லால், வங்கி நிர்வாகிக ளிடம் விசாரித்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon