சுடச் சுடச் செய்திகள்

தண்ணீர் , மின்சார பயனீட்டை பொதுத்துறை குறைக்கும்

நாடளாவிய பசுமையாக்கம் திட் டத் தின் ஒரு பகுதியாக, பொதுத் துறை தண்ணீர், மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுப் புறத்தைக் காக்க தம் பங்கை ஆற்றும். பொதுத் துறை எதிர்வரும் 2020ம் ஆண்டுக்குள் 2013ஆம் ஆண்டைவிட 15 விழுக்காடு குறை வான மின்சாரமும் ஐந்து விழுக் காடு குறைவான தண்ணீரும் பயன்படுத்தும். துணைப் பிரதமரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச் சருமான டியோ சீ ஹியன் நேற்று அறிவித்த பொதுத் துறையின் 2017-2020 ஆண்டுக்கான நீடித்த நிலைத்தன்மை திட்டத்தில் இந்த இலக்கு வெளியிடப்பட்டது.

பொதுத் துறையின் புதிய கட்டடங்கள் அனைத்தும் பசுமை முத்திரை பிளாட்டினம் தரத்தை எட்டும். தற்போதுள்ள கட்டடங் கள் பசுமை முத்திரை தங்கத் தரத் தையாவது எட்டவேண்டும் என்பது இலக்கு. மின்னனு, காகிதப் பொருட் களைச் சேகரிக்கும் பசுமை திட்டம், பொதுத் துறை கட்டடங் களில் உணவுக் கழிவு மறுப யனீட்டுத் திட்டம், தெங்கா நீர்த்தேக்கத்தில் சூரிய சக்தி சோதனை திட்டம் ஆகியவற்றைப் பொதுத் துறை தொடங்கும். அதோடு, பசுமை தொழில் நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து, புதுப்பிக்கக்கூடிய எரி சக்தி யைப் பயன்படுத்த புதுமையா ன வழிகளைக் கண்டறியும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon