லஞ்சப் பணத்தைத் திருப்பித் தரும் ஆந்திர அதிகாரிகள்

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களிடம் வாங்கிய லஞ்சப்பணத்தைத் திருப்பித் தரத் தொடங்கியுள்ளனர் அதிகாரிகள். லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பற்றி பாதிக்கப்பட்ட வர்கள் 1100 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து புகார் தரலாம். புகார் உண்மையாக இருந்தால் லஞ்சம் வாங்கிய ஊழியரே பாதிக் கப்பட்டவரின் வீடு தேடி வந்து வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பார். ஆந்திர அரசு நடைமுறைப்படுத்தி யுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து லஞ்ச மாகப் பெற்ற பணத்தை அதிகாரிகளும் ஊழியர்களும் திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் இந்தியாவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டி ய லில் கர்நாடகத்துக்கு அடுத்த இடத்தில் ஆந்திரப் பிரதேசம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்காக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மே மாதம் 25ஆம் தேதி இந்தத் திட்டத்தை தொடங்கினார். இத்திட்டத்தின்படி, அரசு சேவைகளையும் சலுகைகளையும் பெறுவதற்கு அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்திருந்தால், 1100 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அழைப்பு மையத்தில் பணியாற் றும் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புகாருக்குள்ளான அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரிப்பார்கள். லஞ்சம் வாங்கியது உறுதிப்படுத்தப்பட்டால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க அறிவுறுத்தப்படுவார்கள்.