கத்தாருடன் நான்கு நாடுகள் உறவை துண்டித்துக்கொண்டன

துபாய்: கத்தார் நாட்டுடனான அரசதந்திர உறவை துண்டித்துக்கொள்வதாக சவூதி அரேபியா, எகிப்து, பக்ரைன் ஆகிய நாடுகளும் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளும் அறிவித்துள்ளன. கத்தார் நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் அந்நாட்டுடனான உறவை துண்டித்துக்கொள்வதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, சவூதி அரேபியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டாதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகவலைத் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதேபோல் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனங்கள் இன்று முதல் கத்தாருக்கான அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன. கத்தாருடனான உறவை நான்கு நாடுகள் துண்டித்துக்கொண்ட நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அது பாதிக்காது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.