ஜோகூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜோகூர் பாரு: ஜோகூர் எல்லையிலும் பொது இடங்களிலும் பாதுகாப்பு வலுப் படுத்தப்பட்டுள்ளது. பக்கத்து நாடுகளில் அண்மையில் நடந்த தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு உள்ளூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் போலிசார் கூறினர். போலிஸ் அதிகாரி களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சியில் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இதுபற்றிக் கூறினார். ஜோகூருக்கு பயங்கரவாத மிரட்டல் எதுவும் இல்லை என்று கூறிய அந்த அதிகாரி, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நட வடிக்கைகளை எடுப்பது நல்லது என்று சொன்னார். இருப்பினும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.