போலிசில் இருமுறை புகார் செய்யப்பட்ட பயங்கரவாதி

லண்டன்: லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதி களில் ஒருவனைப் பற்றி அவனது முன்னாள் நண்பர் ஒருவரும் இத்தாலிய மாது ஒருவரும் சில தகவல்களைக் கூறியுள்ளனர். அந்தப் பயங்கரவாதிகளில் ஒருவன் 27 வயது முஸ்லிம் தீவிரவாதி என்றும் அவனைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இரண்டு முறை போலிசில் புகார் செய்பட்டிருந்ததாகவும் பிரிட்டிஷ் ஊடகத் தகவல்கள் கூறின. அவனைப் பற்றி புகார் செய்யப் பட்டிருந்தும் அதிகாரிகள் ஏன் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; அவன் எப்படி உளவு அதிகாரிகளின் கண் காணிப்பிலிருந்து தப்பினான் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. லண்டன் மேம்பாலத்தில் மூன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். தாக்குதலில் காயம் அடைந்த ஒரு போலிஸ் அதிகாரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின் றன.

லண்டன் மேம்பாலத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளையும் போலிசார் சுட்டுக்கொன்றனர். அந்த மூவரில் ஒருவன் சென்ற ஆண்டு தொலைக்காட்சியில் வெளியான பிரிட்டிஷ் தீவிர வாதிகளைப் பற்றிய விளக்கப் படத்தில் காணப்பட்டதாக டெய்லி மெயில் தகவல் குறிப்பிட்டுள்ளது.

பரோ சந்தைப் பகுதிக்கு வெளியே தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்