சுடச் சுடச் செய்திகள்

பாரதிராஜாவை குரங்கு என பாராட்டிய பார்த்திபன்

‘பாரதிராஜா ஒரு குரங்கு’ பாரதிராஜாவை குரங்கு என நடிக ரும் இயக்குநருமான பார்த்திபன் வித்தியாசமாக பாராட்டி உள்ளார். “பாரதிராஜா நல்ல இயக்குநர் என்று எல்லாரும் சொல்வார்கள். பாரதிராஜா சிறந்த மனிதர் என்றும் சொல்வார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”. குரங்கு நான்கு எழுத்து. கு-நல்ல குண வான், ர - சிறந்த ரசனையாளர், ங் - இங்கிதம் தெரிந்தவர், கு- குவாலிட்டியானவர் என்று பாரதி ராஜாவை பார்த்திபன் வித்தியாச மாக விமர்சித்து உள்ளார். நித்திலன் இயக்கத்தில் பாரதி ராஜா, விதார்த் நடிப்பில் உருவாகி யுள்ள படம் ‘குரங்கு பொம்மை’.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடை பெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், மனோபாலா, பார்த்திபன், இயக்கு நர் தரணி, சிபிராஜ், விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல். தேனப்பன், ஞானவேல்ராஜா, மைம் கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் நிர்வாக தயாரிப் பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ‘குரங்கு பொம்மை’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய, பார்த்திபன் தன் குருவின் குருவை வித்தியாசமாகப் பாராட்டினார்.

விழாவில் நடிகரும் இயக்கு நருமான பார்த்திபன் பேசுகையில், “இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ் நாள் போதாது. தமிழ்ச் சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டு விழா எடுக்கவேண்டும். இந்தப் படத்தின் தலைப்பு ரொம்ப வித்தி யாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப் படுகிறேன்,” என்றார் பார்த்திபன்.

‘குரங்கு பொம்மை’ படத்தில் இடம்பெறும் காட்சியில் பாரதி ராஜா, விதார்த் மற்றும் பலர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon