சுடச் சுடச் செய்திகள்

அருள்நிதி: என் உயரத்துக்கு நாயகி கிடைப்பது சிரமம்தான்

என் உயரத்துக்கு நாயகி கிடைப்பது சிரமம் என்பது உண்மைதான். ஓரளவுக்கு எனக்குப் பொருத்தமாக இருக்கும் ஜோடியைத்தான் அலசி, ஆராய்ந்து என்னுடன் இயக்குநர்கள் பலரும் ஜோடி சேர்த்து வருகின்றனர். என் னுடன் நடிக்கும் நடிகைகளில் பலரும் கீழே ஒரு பெட்டியைப் போட்டு அதன் மீது ஏறி நின்றுதான் என்னுடன் நடிப்பார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் அருள்நிதி. ஆனால், இதுவரை எந்த நடிகைக்கும் நான் “இந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுங்கள்,” என்று சொன்னது இல்லை. இயக்குநர் யாரை தேர்வு செய்து என் னுடன் நாயகியாக நடிக்கச் சொல் கிறாரோ அந்த நடிகையுடன் நடிப்பேன்.

தனிப்பட்ட முறையில் யாருக்கும் நான் வாய்ப்பு தரும்படி கேட்டு இவர் களுடன்தான் நடிப்பேன், இவர் களுடன் நடிக்கமுடியாது என்றெல்லாம் தொந்தரவுகள் கொடுப்பது இல்லை. நான் நண்பர்களுடன் விருந் துக்குப் போனதில்லை என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். கல்லூரியில் படிக்கும்போது விருந்துகளுக்கும் இரவுக் கொண் டாட்டங்கள் பலவற்றிலும் நெடுநேரம் பங்கேற்றது உண்டு. இப்போது குடும்பம், குழந்தை என ஆகிவிட்டதால் விருந்துக்கு விடை கொடுத்துவிட்டேன். இதில் மது விருந்தும் அடங்கும். இரவு நேரங்களில் நண்பர் களுடன் அதிக நேரம் செலவழித்த பின்னர் வீட்டிற்குத் திரும்பிய அனு பவமும் உண்டு என்கிறார் அருள்நிதி. திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து வந்த மற்றொரு திரையுலக வாரிசுதான் அருள்நிதி. ஏற்கெனவே சில வெற்றிப்படங்களைக் கொடுத் துள்ள இவர், ராதாமோகன் இயக்கத்தில் ‘பிருந்தாவனம்’ என்ற படத்தில் நடித்த அனுபவம் குறித்து தமிழக செய்தியாளர் களிடம் பேசினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon