போலிஸ் அதிகாரியைத் தூற்றிய தாமஸ் சுவா

வாசனை திரவியம் திருடி கைதானார் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மரணமுற்ற போக்குவரத்து போலிஸ் அதிகாரி ஒருவர் குறித்து முறையற்ற கருத்துகளைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி, அமைச்சர் கா.சண்முகம் உட்பட பலரது கண்டனங்களைச் சம்பா தித்து கொண்ட 38 வயது தாமஸ் சுவா போ ஹெங் (படம்), நேற்று முன்தினம் வேறு விதமான குற்றத் துக்காக கைது செய்யப்பட்டார். சையது ஆல்வி ரோட்டில் உள்ள முஸ்தஃபா செண்டரில் சுவா ஞாயிற்றுக்கிழமை அதி காலை $98 மதிப்புள்ள 100 மில்லி லிட்டர் அளவுள்ள வாசனைத் திர விய போத்தல் ஒன்றைத் திருடி னார் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய் யப்பட்டார். பகுதிநேர விநியோக ஊழியரான் சுவா மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர் மன நலக் கழகத்தில் மனநலப் பரிசோத னைக்கு உட்படுத்தப்படுவார். இம் மாதம் 19ஆம் தேதி சுவா மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை