முன்னாள் ‘எஸ்டி மரின்’ உயர் அதிகாரிக்கு $300,000 அபராதம்

சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் (எஸ்டி) மரின் நிறுவனத்தின் முன்னாள் குழும நிதிக் கட்டுப்பாட்டாளர் ஓங் டெக் லியாமுக்கு (படம்) நேற்று $300,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் நிறுவன வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த மோசடிக் குற்றங்களில் ஆகப் பெரியதான இதில் திருவாட்டி ஓங் பங்கு வகித்தார். 2014ல் வெளியான இந்த மோசடி சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டிருந்த (எஸ்டி) மரின் நிறுவனத்தின் ஏழு உயர் அதிகாரிகளில் 61 வயது திருவாட்டி ஓங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்டி மரின் நிறுவனத்தின் வாடிக்கை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு மொத்தம் $48,887 தொகையை லஞ்சமா கக் கொடுத்த சம்பவங்களில் மற்ற நான்கு உயர் அதிகாரி களுடன் சேர்ந்து திருவாட்டி ஓங் செயல்பட்டார்.

தம் மீது சுமத்தப்பட்ட பத்து குற்றச்சாட்டுகளையும் திருவாட்டி ஓங் ஒப்புக் கொண்டார். அத்துடன் இதுபோன்ற மேலும் 108 குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. திருவாட்டி ஓங் சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் (எஸ்டி) மரின் நிறுவனத்தின் முன்னாள் குழும நிதிக் கட்டுப்பாட்டாளராக 2000ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இருந் தார். அப்போது கேளிக்கை செலவுகள் என்று பொய்யான காரணம் காட்டி, நிறுவனத்தின் காசோலைகளில் கையெழுத் திட்ட மோசடியில் அவர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை