சுடச் சுடச் செய்திகள்

மின்னிலக்கத் தீர்வுகளுக்கு உதவும் ‘99%SME’ இயக்கம்

நேற்று தொடங்கப்பட்ட 99%SME திட்டத்தின் புதிய இயக்கம், தொழில்நுட்ப இடையூறுகளுக்கு மத்தியில் சிறிய, நடுத்தர நிறுவ னங்கள் மின்னிலக்கமயமாக உதவவிருக்கிறது. சிங்டெல் நிறுவனமும் டிபிஎஸ் வங்கியும் 2015ல் 99%SME திட் டத்தைக் கூட்டாகத் தொடங்கின. இத்திட்டத்தின் இவ்வாண்டு இயக்கம், 99%SME இணையத் தளத்தில் 5,000 பதிவுகள் திரட்டுவதை இலக்காகக் கொண் டுள்ளது. இது சென்ற ஆண்டின் இலக்கைவிட இருமடங்கு அதி கம். அதோடு, அலிபாபா நிறுவனத் திற்குச் சொந்தமான லசாடா சிங்கப்பூர் நிறுவனம் நடத்தும் 99%SME இணையச் சந்தையில் சேர்ந்து இணைய வர்த்தகத்தில் கால்பதிக்க சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதும் இயக் கத்தின் இலக்காகும்.

சில தொழில் நிறுவன உரிமையாளர்கள் தொழில்நுட்ப மாற்றங் களை மிரட்டலாகக் கருதிய போதிலும், சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாறக்கூடியவர்களால் மின்னிலக்கப் பொருளியல் வாய்ப் புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் வலியுறுத் தினார். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எச்சரிக்கையான பொருளியல் சூழலை எதிர்நோக்கும் தருணத் தில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக சிங்டெல் நிறுவனங்கள் குழுமப் பிரிவின் தலைமை நிர் வாக அதிகாரி திரு பில் சாங் கூறினார். “தொழில்நுட்பம் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ப தைச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஒப்புக்கொண்டபோதிலும், மின் னிலக்கமயத்தின் சக்தியைப் பல நிறுவனங்கள் இன்னும் முழுமை யாகப் பயன்படுத்தத் தொடங்க வில்லை என எங்கள் அனுபவத் தில் தெரிந்து கொண்டோம்,” என் றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon