சுடச் சுடச் செய்திகள்

அதிமுகவி இருந்து தினகரன் குடும்பம் நீக்கம்

சென்னை: தினகரன் குடும்பத்தார் ஒட்டுமொத்தமாகக் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்படு கிறார்கள் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக் குமார் நேற்று பரபரப்பாக அதிரடி அறிவிப்பு விடுத்தார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் பிணையில் வெளிவந்து, மீண்டும் கட்சி பணிகளைத் தொடர்வேன் என்று தெரிவித்துவிட்டு நேற்று பெங்களூரு சிறையில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்கச் சென்றார். இந்தப் பரபரப்பான சூழலில் தலைமைச் செயலகத்தில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக் குமார் அறையில், நேற்று அமைச் சர்கள் ‘திடீர்’ ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சா மியை அந்த 20 அமைச்சர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தத் தொடர் ஆலோசனை களுக்குப் பிறகு அமைச்சர் ஜெயக் குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது ஜெயக் குமார் பலவற்றைத் தெரிவித்தார். “வரும் ஜூன் 14ஆம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில் கட்சியும் ஆட்சியும் எப்படி வழி நடத்திச் செல்லப்பட வேண்டும் என்பது குறித்து முதல் வருடன் ஆலோசனை செய்தோம். “நான்கு ஆண்டு கால ஆட்சி யைத் தொடர வேண்டியதே எங்கள் முக்கிய இலக்கு. எனவே இதற்காக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம். “கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று தினகரன் அவராகவே கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். “எனவே அந்த அறிவிப்பின்படி அவர் செயல்பட வேண்டிய அவ சியம் உள்ளது. கட்சி நலனுக்காக தினகரன் குடும்பத்தார் அனை வரையும் ஒட்டுமொத்தமாக கட்சி யிலிருந்து விலக்கிவைப்பதாக நாங்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து உள்ளோம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon