பிரிட்டிஷ் இளவரசர் ஹேரியுடன் நோன்பு

முஹம்மது ஃபைரோஸ்

திறந்த அரிய அனுபவம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் நோன்பு திறக்கும்போது பிரிட்டிஷ் இளவரசர் ஹேரிக்குப் பக்கத்தில் தாம் அமர போகிறோம் என்று 32 வயது நஸ்ஹத் ஃபஹிமாவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்ன தாக மட்டுமே தெரிவிக்கப்பட்டது. “அந்தச் சூழலில் எப்படி நடந்துகொள்வது என்று எனக்குக் குழப்பமாக இருந்தது. அவரிடம் என்ன சொல்வது என்று நான் ஒத்திகை செய்ய ஆரம்பித்தேன்,” என்று அமைதிக்கான சிங்கப்பூர் முஸ்லிம் இளைய தூதுவரான அவர் கூறினார்.

“பிரிட்டிஷ் இளவரசரை முறை யான பட்டப் பெயர்படி அழைக்க எனக்குள் நினைவு படுத்திக் கொண்டிருந்தேன். இருப்பினும், அவரிடம் பேசத் தொடங்கியதும் நண்பரிடம் பேசுவதைப் போல இருந்தது,” என்று திருமதி ஃபஹிமா தமிழ் முரசிடம் தெரிவித்தார். 32 வயது இளவரசர் ஹேரியுடன் அவர் நகைச்சுவை யான விஷயம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் அனைத்துலக ஊடகங் கில் வலம் வந்துகொண்டிருக் கின்றன. பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு நோன்பு திறப்பதன் முக்கியத் துவத்தைப் பற்றி இளவரசர் ஹேரி திருமதி ஃபஹிமாவிடம் கேட்டிருந்தார். அதற்குத் திருமதி ஃபஹிமா, இந்தப் பாரம்பரியத்தை முஸ்லிம்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இளவரசர் ஹேரியுடன் பேசி மகிழும் திருமதி நஸ்ஸத் ஃபஹிமா (வலது). படம்: ஏஎஃப்பி

Loading...
Load next