சன்னல்கள் விழும் சம்பவங்கள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் சன்னல்கள் விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 28 சன்னல்கள் விழுந்துள்ளன. இது கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் விழுந்த சன்னல்களின் எண்ணிக்கையை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகம். இந்த ஆண்டில் விழுந்த சன்னல்களால் யாரும் காயமடைய வில்லை. கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 16 சன்னல்கள் விழுந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் சராசரி யாக 24 சன்னல்கள் விழுந்துள்ளன. இதைவிட மேலும் அதிகமான சன்னல்கள் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் விழுந்துள்ளன.

வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சன்னல்களை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பராமரித்து, தேவையான மாற்றங் களைச் செய்யவேண்டும் என்று கட்டட, கட்டுமான ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் கூட்டறிக்கை மூலம் நேற்று தெரி வித்தன. விழுந்த சன்னல்களில் பெரும் பாலானவை தள்ளித் திறக்கப்படும் சன்னல்கள். அவற்றின் ஆணிகள் துருப்பிடித்து இருந்தது அவை விழுவதற்குக் காரணமாகத் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் இழுவை (ஸ்லைடிங்) சன்னல்களில் பெரும் பாலானவை அவற்றுக்குத் தேவை யான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. தள்ளித் திறக்கப்படும் சன்னல் களில் இருக்கும் அலுமினிய ஆணிகளுக்குப் பதிலாக துருப் பிடிக்காத 'ஸ்டேன்லஸ் ஸ்டீல்' ஆணிகளைப் பொருத்த அங்கீ காரம் பெற்ற ஒப்பந்தக்காரர்களை நாடும்படி வீட்டு உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!