அமைச்சர்கள் அறைகளில் முதல்வர் பழனிசாமி புகைப்படம்

சென்னை: அதிமுக கட்சியிலும் ஆட்சியிலும் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்களின் அனைத்து அறைகளிலும் முதல்வர் பழனிசாமி படங்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் பழனிசாமி படமும் வைக்கப்பட்டுள்ளது தினகரன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் மட்டுமே அதிமுக அமைச்சர்கள் அலுவலகங்களில் காணப்பட்டது. தற்போது முதல்வர் பழனிசாமி படமும் அமைச்சர்களின் அலுவலகங்களை அலங்கரிக்கின்றன. படம்: இந்திய ஊடகம்

Loading...
Load next