சென்னையில் மழை; வெயிலில் காய்ந்த மக்கள் மழையில் நனைந்தனர்

சென்னையில் நேற்று பலத்த மழை பெய்ததால் வெயிலில் காய்ந்து வாடியிருந்த மக்கள் குளிரில் மிதந்தனர். சென்னையிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று கடும் மழை பெய்தது. மதியம் வரை வெயில் இருந்தது. பிற்பகல் 2.00 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது. பின்னர் அண்ணாசாலை, பட்டினப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், வடபழனி, அசோக் நகர், நுங்கம் பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம், தரமணி, கந்தன் சாவடி உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பாரிமுனை, திருவல்லிக்கேணியில் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் பொன்னேரி, புழல் போன்ற சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. படம்: ஏஎஃப்பி

Loading...
Load next