சுடச் சுடச் செய்திகள்

தினகரனுக்கு பெருகும் ஆதரவு

சென்னை: அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க முயற்சி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் சிக்கி இரு மாதங்கள் திகார் சிறையில் இருந்த தினகரன் பிணையில் விடுவிக்கப்பட்டதும் கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடு பட போவதாக அறிவித்தார். சிறைக்குச் செல்வதற்கு முன் கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்ட தாகக்கூறிய தினகரன், பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவ தாக தெரிவித்தார். இதனால் எடப்பாடி அணியினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் ஜெயகுமார் தலைமையிலான அமைச்சர்கள் 27 பேர் ஒன்றுகூடி தினகரனும் சசிகலாவும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதுதான் என்று அறிவித்தனர். இதற்கிடையே, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்த தினகரன், அமைச்சர் ஜெயகுமார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் கேட்ட சசிகலா, “ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தால்தான் மரியாதை. அமைச் சர்களுக்கு எதிராக நம்முடைய ஆதரவாளர்கள் யாரும் கருத்துச் சொல்ல வேண்டாம்,” என்று அறி வுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய தினகரன், அதி முகவைச் சேர்ந்த இரு அணிகளும் இணைய 2 மாத கால அவகாசம் கொடுப்போம் என்று ‘அதிமுக அம்மா’ அணி பொதுச் செயலர் சசிகலா தெரிவித்ததாகக் கூறி னார். மற்றொரு நிலவரத்தில் நேற்று தினகரனைச் சந்தித்த ஏழு எம்எல் ஏக்கள் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர். ஏற்கெனவே பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல், ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்கத் தமிழ்ச்செல்வன், சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் பரமக்குடி எம்எல்ஏ முத்தையா, மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல் லப்பா, கலசப்பாக்கம் பன்னீர் செல்வம், செய்யாறு மோகன், அரவக் குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், பழனி யப்பன் ஆகியோர் நேற்று தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் 11 எம்எல் ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனி சாமி அரசுக்கு மறைமுகமாக மிரட் டல் விடுத்துவருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் திடீரென்று போர்க் கொடி உயர்த்தி, ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவார்களோ என்ற அச்சமும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஏற்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon