‘முன்னேற்றத்துக்கு அவசியம் ஊழலின்றி இருப்பது’

சிங்கப்பூர் ஊழலின்றி இருந்தால் தான் முன்னேற்றமடைய முடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று கூறினார். நீதிமன்றங்கள், அரசாங்கம், அரசாங்க ஊழியர்கள், காவல் துறையினர் அனைவரும் உயரிய செயல்முறையையும் நேர்மையையும் கட்டிக்காத்தாலும், ஊழல் சமுதாய வழக்கமாகிவிடாதிருப்பதை உறு திப்படுத்துவதில் பொதுமக்களும் முக்கிய பங்காற்றுகிறார்கள் என் றார் அவர். “நம் நாட்டை உருவாக்கிய தலைவர்கள், அரை நூற்றாண்டுக் கும் மேலாக நிர்மாணிக்கப்பட்ட ஊழலற்ற செயல்முறையை நமக் காக விட்டுச் சென்றனர். இது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். அதோடு, இதனைப் பாதுகாக்க நம்மால் முடிந்த வரை முயற்சி எடுக்கவேண் டும்,” என்றார் திரு லீ. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரி வின் புதிய ‘லஞ்ச ஊழல் புகார ளிப்பு, மரபுடைமை நிலையத்தின்’ அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் லீ பேசினார்.

விட்லி சாலையில் அமைந்திருக் கும் இந்நிலையம் ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது. லெங்கொக் பாருவில் உள்ள லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் தலைமையகம் தவிர பொதுமக்கள் நேரடியாகச் சென்று புகார் அளிக்கக்கூடிய மற்றோர் இடமாக இந்நிலையம் செயல்படு கிறது. ஊழலுக்கு எதிரான சிங்கப் பூரின் வலுவான உறுதியைப் பிரதமர் லீ தமது உரையில் வலியு றுத்தினார். சிங்கப்பூரர்கள் ஊழ லற்ற செயல்முறையைக் கேட்கிறார் கள், எதிர்பார்க்கிறார்கள். லஞ்சம் கொடுப்பதை அல்லது ஏற்பதை அவர்கள் ஆதரிப்பதில்லை என்றார் அவர்.

சிங்கப்பூரில் அனைவரையும் சட்டம், நியாயமாகவும் வெளிப் படையாகவும் நடத்தும் என மக்கள் நம்புகின்றனர். நம் நாட்டின் பொதுச் சேவை அதிகாரிகளுக்குத் தனியார் துறையை அடிப்படையாகக் கொண்ட “நியாயமான, நடை முறைக்கு உகந்த சம்பளங்கள்” தரப்படுவதாகவும் லஞ்சம் ஏற்க வேண்டும் என்ற ஆசையை இது குறைப்பதாகவும் திரு லீ கூறினார். “நம்மிடம் நல்ல பயன்மிக்க செயல்முறை இருக்கிறது, இதை நாம் கட்டிக்காக்க வேண்டும்,” என்றார் அவர். ஊழல் “இயல்பான நடைமுறை யாக” ஏற்கப்பட்டு, துடைத் தொழிக்கப்படக்கூடிய சாத்தியமில் லாத மற்ற பல நாடுகளைப் போல நாம் இல்லை என அவர் சுட்டிக் காட்டினார். புதிய ஊழல் புகாரளிப்பு நிலை யத்தைப் பற்றி பேசிய திரு லீ, பொதுமக்களின் புகார்களை அர சாங்கம் கடுமையான கண்ணோட் டத்துடன் ஆராய்ந்து, விசாரிக்கப் படவேண்டிய புகார்களைத் தீர ஆராயும் என்றார் திரு லீ.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் ஏற்பாடு செய்திருந்த சிறுகதை எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்த பிரதமர் லீ சியன் லூங் அவர்களுடன் உரையாடுகிறார். வலக்கோடியில் இருப்பவர் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் வோங் ஹோங் குவான். படம்: சாவ் பாவ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon