மழையால் மீண்டும் மீண்டும் ஏமாற்றம் அடைந்த ஆஸ்திரேலிய அணி

லண்டன்: சிறிய கிரிக்கெட் உல­கக் கிண்ணம் என்று அழைக்­கப்படும் வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரே­லிய அணி மீது மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தைக் கொட்டித் தீர்த்­துள்ளது மழை. இங்கிலாந்தில் நடந்து வரும் இப்போட்டித் தொடரில் பங்கேற்­றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பங்ளாதேஷ், ‘பி’ பிரிவில் நடப்புச் சாம்பியன் இந்­தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்­ தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்­குத் தகுதிபெறும்.

இன்னும் குறைந்தது 4 ஓவர்கள் விளையாடினால் போட்­டிக்கு டக்வொர்த் லீவிஸ் முறை­யில் முடிவு கிடைக்கும் என்ற நிலையில், மழை வந்து முடிவுக்கு வேட்டு வைத்தது. குறிப்பாக, இன்னும் குறைந்தது 4 ஓவர்கள் விளையாடினால், போட்டிக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் முடிவு கிடைக்கும் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆஸ்திரேலியா - பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தடைபட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம்  ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.  படம்: ஊடகம்

16 Sep 2019

செல்சி, யுனைடெட், ஸ்பர்ஸ் குழுக்கள் வெற்றி

மேன்சிட்டிக்கு எதிராக கிட்டிய வெற்றியைக் கொண்டாடும் நார்விச் வீரர்கள். இடது படம்: கம்பீரத்துடன் வெற்றி நடை போடும் நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்க. படங்கள்: ஏஎஃப்பி

16 Sep 2019

எட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி