கிரிக்கெட் விதிமுறை மாற்றங்கள் ஐசிசி ஏற்பு

துபாய்: கிரிக்கெட் வீரர்களை திடலை விட்டு வெளியேற்றும் சிவப்பு அட்டை, கிரிக்கெட் மட்டை அளவு குறைப்பு, ‘ரன் அவுட்’ முறைகளில் மாற்றங்கள் ஆகிய பரிந்துரைகளை ஐசிசி எனப்படும் அனைத்துலகக் கிரிக்கெட் மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. திடலில் மிக மோசமாக நடந்துகொள்ளும் வீரர்ர்களைத் திடலைவிட்டு வெளியேற்ற ஏதுவாக நடுவர்களுக்குச் சிவப்பு அட்டை அதிகாரம் அளிக்க அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) கிரிக்கெட் குழு கடந்த வாரம் பரிந்துரைத் திருந்தது. அத்துடன், நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் ‘டிஆர்எஸ்’ முறையை டி20 போட்டிகளிலும் அறிமுகப் படுத்த அனில் கும்ளே தலைமை யிலான ஐசிசி கிரிக்கெட் குழு பரிந்துரைத்தது. மேலும், ‘எல்பிடபிள்யூ’ தீர்ப்புகளை மறுஆய்வு செய்யும்போது, ‘அம்பயர்ஸ் கால்’ என்ற வகையில் முடிவை சில நேரங்களில் நடுவரே தீர்மானிக்க முடியும்.

அந்த சமயங்களில் பாதிக்கப் படும் அணிக்கான ஒரு மறுஆய்வு வாய்ப்பைப் பறிக்கத் தேவை யில்லை என்றும் பரிந்துரைக் கப்பட்டு உள்ளது. இதனால், 80 ஓவர்களுக்கு இரண்டு மறு ஆய்வு வாய்ப்புகள் என்ற முறை அகற்றப்படும். அதேபோல, டெஸ்ட் வெற்றியாளர்‌ போட்டிகளை நடத்துவதற்கும் குழு ஒரு மனதாக ஆதரவு தெரிவித் துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம்  ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.  படம்: ஊடகம்

16 Sep 2019

செல்சி, யுனைடெட், ஸ்பர்ஸ் குழுக்கள் வெற்றி

மேன்சிட்டிக்கு எதிராக கிட்டிய வெற்றியைக் கொண்டாடும் நார்விச் வீரர்கள். இடது படம்: கம்பீரத்துடன் வெற்றி நடை போடும் நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்க. படங்கள்: ஏஎஃப்பி

16 Sep 2019

எட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி