விஜய்யின் புதிய படத்தில் யோகி பாபு

‘பைரவா’ படத்துக்குப் பிறகு விஜய் நடித்து வரும் பெயரிடப்படாத படத்துக்கு ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைக்க, அட்லீ கதை-வசனம் எழுதி இயக்கி வருகிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, உள்ளிட்ட பலர் இப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஒரு கதாபாத்திரத்தில் ‘மேஜிக்’ நிபுணராக விஜய் நடித்துள்ளார். அது மிகவும் சிறிய பகுதி தான் எனத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் பிறந்த நாளான இம் மாதம் 22ஆம் தேதி படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியாகவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் இசை வெளியீட்டு விழாவும் அக்டோபர் மாதம் பட வெளியீடும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அண்மைய படங்களில் சிரிப்பு வெடிகளைக் கொளுத்திப்போட்டு ரசிகர் களிடம் வரவேற்பைப் பெற்றிருக் கும் யோகி பாபுவுக்கு இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத் திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். முன்னணி கதாநாயகர்க ளின் படத்தில் சிரிப்பு வேடங்களில் நடித்துவரும் யோகி பாபுவின் மதிப்பு இப்படத்தின் மூலம் இன்னும் உயரும் என்று சொல்லப் படுகிறது. அட்லீ படத்தை முடித்த வுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி உள்ளார் விஜய் என்பது கவனிக்கத்தக்கது.

கா கா கா படக் காட்சியில் யோகி பாபு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon