சுடச் சுடச் செய்திகள்

வெள்ளித்திரையில் பிரியா

சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றோர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ்த் திரையுலகில் நல்லதொரு இடம் பிடித்திருக்கின்றனர். அந்த வரிசையில் 'கல்யாணம் முதல் காதல் வரை' தொலைக்காட்சித் தொடர் புகழ் பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சி ஒன்றில் செய்தித் தொகுப்பாளராக அறிமுகமான பிரியா, சின்னத்திரை நாடகத் தொடரில் நடித்து வந்தார்.

அவருக்கு வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளனர். திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறி திடீரென தொலைக்காட்சித் தொடரில் இருந்து விலகினார். தனது காதலரை திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறப்போவதாகக் கூறினார் பிரியா. ஆனால் இப்போது தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவரது தரப்பில் கூறப்படுகிறது.

பிரியா நடிக்கவுள்ள படம், அதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றி அடுத்த சில நாட்களில் தகவல் வெளியாகும் என்று தெரிகிறது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் ‘சென்னை டைம்ஸ்’ 2016ம் ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு தொலைக்காட்சித் தொடர் நடிகை பிரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon