சுடச் சுடச் செய்திகள்

கண்தானம் செய்ததுடன் ரசிகர்களிடமும் வேண்டுகோள்

உதவி தேவைப்படுவோருக்கு பல வகைகளிலும் ஆதரவு அளித்துவரும் நடிகர் விஜய் சேதுபதி நேற்று முன்தினம் தமது கண்களைத் தானம் செய்வதாக அறிவித்ததுடன் தமது ரசிகர்களிடமும் கண்தானம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். மதுரையில் நேற்று முன்தினம் அகர்வால் கண் மருத்துவமனையின் இரண்டாவது கிளையைத் திறந்து வைத்தார் விஜய் சேதுபதி. அப்போது தமது கண்களைத் தானம் செய்வதற்கான பத்திரத்திலும் கையொப்ப மிட்டார் அவர்.

அந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்தும் கலந்துகொண்டார். மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு சென்ற விஜய் சேதுபதிக்கு இளையர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வரும் அவர், சமூக நலத்திற்காக அவ்வப்போது குரல் கொடுத்தும் வருகிறார். மருத்துவமனையைத் திறந்து வைத்துப் பேசிய விஜய் சேதுபதி, “தானத்தில் சிறந்தது கண்தானம் என்பதால் எனது கண்களைத் தானம் செய்துவிட்டேன். “பார்வை இல்லாமல் தவிக்கும் அனைவருக்கும் பார்வை கிடைக்கவேண்டும். அவர்களும் இந்த உலகத்தை எட்டிப் பார்க்க வேண்டும்.

“அதற்கு அனைவருமே கண்களைத் தானம் செய்ய உறுதிமொழி எடுக்க வேண்டும்,” என்று கூறினார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோயாளிகளுக்குப் புரியும் விதத்தில் மருத்துவர்கள் பேச வேண்டும் என்று குறிப்பிட்டதுடன் நோயாளிகளை அதிக நேரம் காக்க வைப்பதைத் தவிர்ப்பதற்கான வழிகளை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon