நாகலாந்தில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள், 1 வீரர் பலி

கௌகாத்தி: நாகாலாந்து மாநிலத் தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட் டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ வீரர் ஒருவரும் பொது மக்களில் ஒருவரும் உயிரிழந் தனர். நாகாலாந்து மாநிலத்தின் மான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் மத்திய ரிசர்வ் படை யைச் சேர்ந்த வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சிஆர்பிஎப் வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக் கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் பயங்கரவாதிகள் தரப்பில் மூவரும் ராணுவ வீரர் தரப்பில் ஒருவரும் பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் உயிரிழந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயங்கரவாதிகளுக்கும் சிஆர் பிஎப் வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வரு வதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

நாகாலாந்து மாநிலத்தில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக அவ்வப் போது காவல்துறையினர், ராணுவ வீரர்கள் என்கவுண்ட்டரில் ஈடுபட்டு வருகின்றனர்.