காருக்குள் பாய்ந்த குதிரை காயத்துடன் மீட்பு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் குதிரை ஒன்று வெயில் கொடுமை தாங்காமல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு காருக்குள் பாய்ந்துள்ளது. “வெயிலின் தாக்கத்தை தாங்கமுடியாமல் குதிரை தன் சேனையை உடைத்துக்கொண்டு எதிர்ப்புறத்தில் வந்துகொண்டிருந்த காரின் உள்ளே பாய்ந்தது. காரின் பேனட் மீது ஏறிய குதிரை, முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு காருக்குள் நுழைந்தது,” என்று இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். கார் ஓட்டுநரை உடனடியாக மீட்ட பொது மக்கள், காயம் அடைந்த குதிரையை வெளியே இழுக்கப் பெரும்பாடுபட்டனர். காவல்துறையும் வனத் துறை அதிகாரிகளும் இணைந்து குதிரையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon