சுடச் சுடச் செய்திகள்

புத்தர் சிலையை விற்க முயன்ற தம்பதி கைது

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காணாமல் போன புத்தர் சிலையை டெல்லியில் விற்க முயன்ற திபெத் தம்பதியைப் போலிசார் கைது செய்துள்ளனர். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 900 ஆண்டு பழமையான இச்சிலையின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அருணாச்சலப் பிரதேச மாநிலம், தவாங் நகரில் உள்ள சாங்யெலிங் கொம்பா என்ற மடத்தின் தலைமை மதகுரு வீட்டில் இருந்த புத்தர் சிலை கடந்த மே 31ஆம் தேதி இரவு காணாமல் போனது. இதையடுத்து, வடக்கு டெல்லியின் மஜ்னு கா டில்லா பகுதியில் இச் சிலையை ரூ.1.4 கோடிக்கு விற்க முயன்ற திபெத் தம்பதிகள் கவாங் சுந்து, 29, லோப்சாங் ககே ஷெர்பா, 26, ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon