போலிஸ் துப்பாக்கிச் சூடு; ஐந்து விவசாயிகள் பலி

போபால்: மத்தியப்பிரசேதச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நடத்திய போராட்டத் தின்போது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து விவசாயி கள் செவ்வாயன்று சுட்டுக்கொல் லப்பட்டனர். இதனால் மேண்ட்சார் மாவட்டத்திலும் அதைச் சுற்றி யுள்ள ஊர்களிலும் கடும் பதற்றம் நிலவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையச் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள் ளன. ஆயிரக்கணக்கான போலி சார் தெருக்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ம.பி. மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சி வன்முறையைத் தூண்டிவிடுவ தாகக் குற்றம் சுமத்தி உள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, நேற்று மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் அவசர சந்திப்புக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இப்பகுதிக்கு இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வருகை அளிக்க உள்ளார். “போலிசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை,” என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதை மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பூபேந்திரா சிங் ஏற்க மறுத்துவிட்டார்.

ம.பி. மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் உருவ பொம்மையை போபாலில் காங்கிரஸ் கட்சியினர் தீயிட்டு கொளுத்துகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்