மீண்டும் வெற்றி வலம் வரும் விவேக்

‘பிருந்தாவனம்’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார் விவேக். கோடம்பாக்கத்தின் முக்கிய புள்ளிகள் மீண்டும் அவரது வீட்டை வலம் வரத் தொடங்கி உள்ளனர். அவர் நடிக்க வந்து 30 ஆண்டு கள் ஆகிவிட்டதாம். தற்போது தனு‌ஷின் ‘விஐபி 2’, சந்தானத்துடன் ‘சக்கபோடு போடு ராஜா’, ஹிப்ஹாப் ஆதியோடு ‘மீசையை முறுக்கு’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் தரம் எந்த அளவு உள்ளது என்று கேட்டால், அந்தந்த காலத் துக்கு ஏற்ப மக்க ளால் ரசிக்கப் படுவதுதான் நகைச்சுவை. எது நல்லது, கெட்டது என்பது இல்லை என்கிறார். “முன்பு கலைவாணர் ஐயா, உயர்ந்த கருத்து களைத் திரைப்படங்கள் மூலம் சொன்னார். அப்போதுள்ள நடை சற்று மெதுவாக இருந்தது. இப்போது அந்த நடையைப் பின்பற்றினால் ரசிகர்கள் மத்தியில் எடுபடாது. வேறு பாணியைக் கடைப்பிடிக்க வேண்டி உள்ளது.

“மக்களுடைய வாழ்க்கைத்தரமும் முறையும் மாறுபடும்போது நகைச்சுவையும் மாற்றம் காண்கிறது. முன்பு திரைப்படங்களில் குட்டைப் பாவாடை அணி வதே புதிய கவர்ச்சியாக இருந்தது. இப்போதுள்ள பெண்களோ பொது இடங்களிலேயே குட்டைப் பாவாடையுடன்தான் வலம் வருகிறார்கள்.” ‘பிருந்தாவனம்’ படம் குறித்து? “தமிழ்த் திரையுலகிலேயே இதுபோன்ற படம் வருவது இதுதான் முதல் முறை என நான் நினைக்கிறேன். இது என் மனதுக்கு நெருக்கமான படம் எனலாம். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

 

“இந்தப் படத்தில் நான் ஓர் அங்கமான பின்னர் இயக்குநர் ராதாமோகன் என்னிடம் பேசியபோது, எங்களுக்கு நகைச்சுவை செய்யும் விவேக் வேண்டாம், நிஜ வாழ்க்கையில் உள்ள விவேக்தான் வேண்டும் என்று கூறினார். அது மிகவும் பிடித்துப்போனது. “நான் ஓரளவு பியானோ வாசிப்பேன். அப்துல் சத்தார்தான் என் குரு. அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த சில வரிகளை இப்படத்தில் நான் உண்மையாகவே வாசித்திருக்கிறேன்.