விக்ரம் பிரபு நடிக்கும் சத்ரியன்

திருச்சி மாவட்டத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை பரபரப்பான திரைக்கதை அமைத்து ‘சத்ரியன்’ என்ற தலைப்பில் படமாக்கி உள்ளார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். “இப்படத்தின் நாயகன் விக்ரம் பிரபு. அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மஞ்சிமா மோகன். மேலும் கவின், ஐஸ்வர்யா தத்தா ஆகியோ ரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைந்துள்ளார்.