சுடச் சுடச் செய்திகள்

‘பொங்கோல் நார்த்’ நீட்டிப்பு 2023ஆம் ஆண்டில் திறப்பு

வடக்கு-கிழக்கு ரயில்பாதையின் பொங்கோல் நார்த் நீட்டிப்பு, எதிர்பார்த்ததைவிட ஏழு ஆண்டு கள் முன்னதாக 2023ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிலையமே கொண்ட இந்த நீட்டிப்பு சுமார் 1.6 கிலோ மீட்டர் நீளமாகும். பொங்கோல் நார்த் வட்டாரத் திற்குச் சேவையாற்றும் இந்த ரயில் நிலையம் பெரும்பாலும் ‘பொங்கோல் கோஸ்ட்’ நிலையம் என்றழைக்கப் படும். கிழக்கு-மேற்கு ரயில்பாதை யின் துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பு பற்றிய கண்காட்சியைப் பார்வை யிட பூன் லே எம்ஆர்டி நிலையத் திற்கு நேற்று வருகையளித்த போது, இரண்டாம் போக்கு வரத்து அமைச்சர் இங் சீ மெங் இதுபற்றி அறிவித்தார்.

“பொங்கோல் நகரில், குறிப் பாகப் பொங்கோலின் வடக்குப் பகுதியில் வாழும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் இது பயன ளிக்கும்,” என்றார் திரு இங். வடக்கு-கிழக்கு ரயில்பாதை யின் நீட்டிப்பு, பொங்கோலின் மற்ற மேம்பாடுகளுடன் ஒருங்கே கட்டப்படும் என நிலப் போக்குவ ரத்து ஆணையம் முன்னதாகக் கூறியிருந்தது. இதன்வழி, பொங்கோல் நார்த்தின் வருங்கால குடியிருப் பாளர்கள் நகர மையத்திற்கும் சிங்கப்பூரின் மற்ற பகுதிக ளுக்கும் செல்ல ரயில் இணைப்பு கிடைக்கும். பல பயன் வட்டாரமாகத் திட்டமிடப்படும் பொங்கோல் நார்த், மின்னிலக்க, இணையப் பாதுகாப்புத் தொழில்துறைகள் அமைந்துள்ள ‘நிறுவன வட்டார மாக’ உருவெடுக்கவுள்ளது.

புதிய திட்டமைப்புக் கூறுகள் முதன்முதலாக அறிமுகமாகும் மாவட்டமாகவும் பொங்கோல் நார்த் திகழும். பொங்கோல் நார்த்தின் பிரதான நில மேம்பாட்டாளரான ஜேடிசி நிறுவனம் ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் பொறுப்பேற்க நியமிக்கப்படும். கிழக்கு-மேற்கு ரயில் பாதை யின் துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பி லுள்ள நான்கு புதிய ரயில் நிலை யங்களும் இம்மாதம் 18ஆம் தேதி செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon