அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் அமைச்சர் சண்முகம்

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் நேற்று மாலை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், “இப்படி ஒருவர் மற்றவரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல் சமய நல்லிணக்கத்துக்கு சிறந்த அடையாளம்,” என்றார். பள்ளிவாசலுக்கு நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் வந்த அமைச்சருக்கு பள்ளிவாசலின் வரலாற்றையும் அதன் கட்டட வடிவமைப்புச் சிறப்புகளையும் விளக்குகிறார் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் தலைவர் திரு முகம்மது அப்துல் ஜலீல் (இடக்கோடி). பின்னர் அமைச்சர் சண்முகம் முஸ்லிம்களுடன் இணைந்து உணவருந்தினார். படம்: பெரித்தா ஹரியான்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சந்தேகப்பேர்வழி ஒருவர் தன்னை அவரது சகோதரி என்று கூறி மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சனிக்கிழமை இரவு தன் ஃபேஸ்புக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் பகிர்ந்துகொண்டார். படம்: சாவ் பாவ்

23 Jul 2019

இல்லாத சகோதரர் பெயரில் மோசடி; டின் பெய் லிங் எச்சரிக்கை