சுடச் சுடச் செய்திகள்

கெப்பல் ரோட்டில் ‘ட்ரெய்லர்’ கவிழ்ந்ததால் சாலை மூடல்

கனரக ‘ட்ரெய்லர்’ வாகனம் ஒன்று நேற்றுக் காலை கவிழ்ந்த தால் கெப்பல் ரோட்டின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு மூடப் பட்டது. நிலப் போக்குவரத்து ஆணை யம் நேற்றுக் காலை 10.40 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத் தில், “விபத்து காரணமாக கம் போங் பாரு ரோட்டுக்கு அடுத்து உள்ள கெப்பல் ரோடு போக்கு வரத்துக்கு மூடப்படுகிறது,” என்று செய்தி வெளியிட்டது. இது குறித்து காலை 6.50 மணிக்குத் தகவல் கிடைத்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது அவசரகால வாகனங் களை அவ்விடத்துக்கு அனுப்பி வைத்தது. கனரக வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தில் சிக்கிக்கொள்ள வில்லை. அவர் மருத்துவமனைக் குச் செல்லவும் மறுத்துவிட்டார் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக் குழு அங்கு பிற்பகல் 12.45 மணிக்கு சென்றபோது, கவிழ்ந்து கிடக்கும் ‘ட்ரெய்லர்’ கொள்கல னைத் தூக்கி நிறுத்த இரு பாரந் தூக்கி லாரிகள் அங்கு நிறுத்தப் பட்டிருந்ததைப் பார்த்தது. ‘ட்ரெய் லர்’ லாரி அதற்கு முன்னதாக அங்கிருந்து அகற்றப்பட்டு விட் டது. கெப்பல் ரோட்டிலிருந்து மரினா கோஸ்டல் விரைவுச் சாலைக்குள் அந்தக் கனரக லாரி திரும்ப முயன்றபோது, விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்ப டுகிறது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.

கெப்பல் ரோட்டில் கனரக ‘ட்ரெய்லர்’ வாகனம் பக்கவாட்டில் சாய்ந்து கிடக்கிறது. படம்: வான் பாவ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon