சுடச் சுடச் செய்திகள்

நற்காரியத்திற்காக குடும்பமே போட்டுக்கொண்ட மொட்டை

புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்ட தொடக்கநிலை ஒன்றி லேயே மொட்டையடிக்கத் தொடங் கிய 14 வயது ரோகன் தனராஜன் இப்போது தமது முழு குடும்பமும் அதில் ஈடுபட காரணமானார். முதன் முறையாக இவ்வாண்டு மனைவி திருமதி தில்லையம்மாள் (61), மகள் திருமதி கவிதா (40), மருமகன் திரு தனராஜன் (48), தம்பி திரு சத்யவர்மன் (46) என மொத்தம் ஏழு குடும்ப உறுப்பினர்களுடன் ‘கேர் ஃபோர் ஹோப்’ நிதி திரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் 66 வயது திரு கணபதி சண்முகம். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு முன் தமது இரண்டாவது தங்கையை மார்பக புற்றுநோய்க்குப் பரிகொடுத்துள்ளார் திரு கணபதி.

“டாக்சி ஓட்டுநர்களால் கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘கேபிகேர்’ எனும் சமூகத் தொண்டூழிய அமைப்பின் தலைவருமான திரு கணபதி, இது போன்ற நிகழ்ச்சிகளால் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என நம்புவதாக கூறினார். இவர்களுடன் ஏறக்குறைய 250 டாக்சி ஓட்டுநர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொட்டையடித்துக் கொண்டதுடன் கிட்டத்தட்ட $50,000 நிதியும் திரட்டப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக நிதி திரட்டும் ‘ஹேர் ஃபோர் ஹொப்’ நிகழ்ச்சி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மோண்ட்ஃபோர்ட் ஜூனியர் பள்ளியில் நடைபெற்றபோது ஆர்வத்துடன் அதில் பங்கேற்றார் ரோகன். “வீட்டிற்கு வந்த ரோஹன் மொட்டையடிக்கப்போவதாக கூறியபோது சற்று அதிர்ந்து போனேன்,” என்ற ரோகனின் 40 வயது தாயார் திருமதி கவிதா, ரோகனுடன் சேர்ந்து முதல் முறையாக புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்ட நேற்று மொட்டையடித் துக்கொண்டார்.

புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்ட குடும்பத்துடன் மொட்டை அடித்துக் கொண்ட ரோகன் தனராஜன். அவருக்குப் பின்னால் (இடமிருந்து) தந்தை திரு தனராஜன், தாயார் திருமதி கவிதா, பாட்டி திருமதி தில்லையம்மாள். (வலமிருந்து) தாத்தா திரு கணபதி, சின்ன தாத்தா திரு சத்யவரதன், அவரது மகன் மத்சியேந்திரா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon