விரைவில் தேர்தல் வரப்போகிறது - மு.க.ஸ்டாலின்

“அதிமுக உடைபட்டுக் இருக்கிறது. அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு கொடுப்பார்கள். ஆனால், ஆட் சியைக் கவிழ்க்க மட்டும் துணை நிற்க மாட்டார்கள். “தமிழக அரசியலில் திடீரென ஏதாவது நடந்துவிடுமா என்ற நிலை தற்போது உள்ளது. தற் போது வெளிவரும் செய்திகளைப் பார்க்கும்போது, விரைவில் தேர் தல் வரப்போகிறது என்று தெரிகி றது,” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தெரிவித்தார். தமிழக விவசாயிகள் பிரச்சி னைக்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர் மானங்களை நிறைவேற்றியதாகச் சுட்டிக்காட்டிய அவர், அந்தத் தீர்மானங்களைப் பிரதமரிடம் கொடுக்க, பலமுறை அணுகியும் பிரதமர் நேரம் கொடுக்கவில்லை என்றார்.

தமிழகத்தில் வெட்கக்கேடான ஆட்சி நடைபெறுகிறது என்றும் ஒரே ஒரு வாக்குப்பதிவில் மூன்று முதல்வர்கள் ஆட்சி நடத்தியது தமிழகத்தில் மட்டுமே நடந்துள்ள தாகவும் அவர் விமர்சித்தார். “அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் வீடுகளில் வரு மான வரித்துறை சோதனை நடை பெற்றது. ஆனால் மிரட்டலுக்காக மட்டுமே இந்த சோதனை நடத் தப்பட்டதாகத் தோன்றுகிறது. “ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இயக்கம் திமுக.

அவிநாசி அத்திக்கடவு, சிறு வாணி, பாம்பாறு தடுப்பணை பிரச்சினைகளில் திமுக தொடர்ந்து கண்டனக்குரல் களைக் கொடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளைத் திமுக நிறைவேற்றியது,” என்றார் மு.க.ஸ்டாலின். தமிழக அரசியல் சூழ்நிலையை மனதிற்கொண்டு ஸ்டாலின் கூறியுள்ள கருத்துகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையே எதிர்வரும் 14ஆம் தேதி திமுக எம்எல்ஏக்க ளின் கூட்டம் நடைபெற உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon