நாளிதழ் படிக்கும் கருணாநிதி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நாளிதழ் படிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. இது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்மைய சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுத்து வருகிறார் கருணாநிதி. இந்நிலையில் அவரது பிறந்த நாள் விழா, சட்டப்பேரவை வைர விழா சிறப்பாக நடந்தேறியது. அதில் அவர் பங்கேற்கவில்லை. இதற்கிடையே கருணாநிதி நாளிதழ் படிப்பது போன்ற புகைப்படம் இணையத்தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தனது பிறந்த நாள் குறித்த செய்திகளை நாளிதழ்கள் வழி கருணாநிதி படித்து அறிந்ததாகக் கூறப்படுகிறது. கருணாநிதியின் இந்தப் புதிய புகைப்படம் வெளியானதில் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon