சுடச் சுடச் செய்திகள்

தினகரனுக்கு பெருகும் ஆதரவு

சென்னை: திகார் சிறையில் இருந்த அதிமுகவின் த

தினகரன் பிணை பெற்று வெளியே வந்தது முதல் அதிமுகவில் பல்வேறு பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வருகின் றன. அவற்றுள் ஒன்றாக அக் கட்சி மூன்றாகப் பிளவுபட வாய்ப் புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள். அக்கட்சியின் 27 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவின் துணைச் செயலாளர் தினகரனை நேற்று முன் தினம் வரை சந்தித்துப் பேசியுள்ள னர். நேற்றும் சிலர் சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத னால் தினகரன் தலைமையிலும் அதிமுகவில் ஓர் அணி உருவாகி யுள்ளது உறுதியாகத் தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே ஓ.பன்னீர்செல் வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக அதிமுகவினர் செயல்பட்டு வரு கின்றனர். தினகரன் சிறைக்குச் சென்ற நிலையில், அவருடைய குடும்பத்தாரை அதிமுக ஒட்டு மொத்தமாகப் புறக்கணிப்பதாக முதல்வர் எடப்பாடி தரப்பு பகிரங் கமாக அறிவித்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக கைதாகி, சிறையிலும் அடைக்கப்பட்ட தினகரன், பிணை பெற்று வெளியே வந்தார். அதன் பிறகு இரண்டே நாட்களில் காட்சிகள் மாறின. அதிமுக எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். எண்பதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறினர். இதன் மூலம் அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, தினகரன் என மூவரின் தலைமையில் தனித்தனி அணிகள் இயங்குவது தெளி வாகத் தெரியவந்திருக்கிறது. எனவே தினகரன் தரப்பினரால் நடப்பு அதிமுக ஆட்சிக்கு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் தினகரனை எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், மற்றொரு பக்கம் முதல்வர் பழனிசாமியும் கட்சி எம்எல்ஏக் களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் அதிமுக வட்டாரங் களில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon