பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த நடிகை விஜயசாந்தி

பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த நடிகை விஜயசாந்தி பெங்களூர்: சசிகலா ஆதரவாளர் எனக் கூறப்படும் பிரபல நடிகை விஜயசாந்தி பெங்களூரு சிறைக்குச் சென்று அவரை ரகசியமாகச் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது என்றும் அப்போது அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயசாந்தி தமிழக அரசியலில் ஈடுபட வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார் என்றும் இதை விஜயசாந்தி ஏற்றுக்கொண்டார் என்றும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசியலில் ஈடுபடுவது குறித்து விஜயசாந்தி விரைவில் அறிவிப்பார் என்றும் அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. இதற்கிடையே தினகரனையும் நேரில் சந்தித்து விஜயசாந்தி பல்வேறு விஷயங்களை விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...
Load next