நாய்க்கடிக்கு 12 லட்சம் பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நாய்க்கடி யால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 12 லட்சம் பேர் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஈஸ்வரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விவரங்களை வெளிக் கொணர்ந்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 12 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதில் 95 விழுக்காடு சம்பவங்களில் தெருநாய்களால் தான் பாதிப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே தமிழக அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி தடுப்பூசி போட அதிக தொகை வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

Loading...
Load next