சுடச் சுடச் செய்திகள்

பண்ணையில் வாகனம்: 2,776 பெட்டி கள்ள சிகரெட் பிடிபட்டது

சுங்கை தெங்கா ரோட்டில் இருக் கும் ஒரு பண்ணையில் நேற்று 2,776 பெட்டி கள்ள சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை கூறியது. இதன் தொடர்பில் 57 வயது ஆடவர் ஒருவர் கைதானார். அவ ரின் வேன் வாகனமும் பறிமுதலா னது. அவர் மீது ஜூன் 3ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது. தொடர்ந்து சூன் லீ ஸ்திரீட்டில் ஒரு வர்த்தகக் கட்டடத்தில் நடந்த சோதனையில் இதர 150 பெட்டி சிகரெட்டுகள் பிடிபட்டன. இத் தகைய குற்றச் செயல்களில் ஈடு படுவோருக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய தீர்வை வரியைப் போல 40 மடங்கு அபராதம் விதிக்க முடியும் என்று சுங்கத் துறை எச்சரித்தது. கள்ளப்பொருட்கள் பற்றி தகவல் அறிந்தவர்கள் 1800- 233-0000 என்ற எண் மூலம் சுங்கத் துறையுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

சுங்கை தெங்கா ரோடு பண்ணை உள்ளே ஒரு வேனில் கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன. படம்: சிங்கப்பூர் சுங்கத் துறை

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon