டாக்சி குப்புறக் கவிழ்ந்தது

சஃப்ரா தெம்பனிஸ் வெளியே நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஒரு டாக்சி குப்புறச் சாய்ந்துவிட்டது. அவ்வழியே சென்றவர்கள் டாக்சி ஓட்டுநரை வெளியே தூக்கிக் காப்பாற்றினர். தெம்பனிஸ் அவென்யூ 1ல் செவ்வாய்க்கிழமை மாலை 6.19 மணிக்கு நிகழ்ந்த அந்த விபத்து பற்றி போலிசுக்கு தெரியப்படுத்தப் பட்டது. ஃபேஸ்புக்கில் ஒரு காணொளியும் பதிவேற்றப்பட்டது. அந்த விபத்தில் இதர இரண்டு கார்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக போலிஸ் தெரிவித்தது. 71 வயது டாக்சி ஓட்டுநர் மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்ட தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப் புப் படை தெரிவித்தது. புலன் விசாரணை தொடர்கிறது.

தெம்பனிசில் செவ்வாய்க்கிழமை இரண்டு கார்கள், ஒரு டாக்சி சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் டாக்சி குப்புறக் கவிழ்ந்துவிட்டது. படம்: இன்ஸ்டகிராம்/ 45. KZA