டெஹ்ரானில் பாதுகாப்பை வலுப்படுத்திய போலிசார்

டெஹ்ரான்: ஈரானில் புதன்கிழமை நடந்த இரு தாக்குதல்களைத் தொடர்ந்து போலிசார் அங்கு பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். தலைநகர் டெஹ்ரானில் முக்கிய தெருக்களிலும் ரயில் நிலையங் களிலும் கூடுதல் போலிசார் பாது காப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சட்ட அமலாக்க நடவடிக்கைகள் அதிகரிக்கப்படலாம் என்று ஈரானிய உள்துறை துணை அமைச்சர் முன்ன தாகக் கூறியிருந்தார். ஈரானின் நாடாளுமன்றக் கட்டடத்திலும் மற்றொரு இடத்திலும் புதன்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் அதிக மானோர் காயம் அடைந்தனர்.

நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் நால்வர், அங்கிருந்த பாதுகாவலாளி ஒருவரையும் மற்றொருவரையும் சுட்டுக் கொன்றதாக செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது. அந்த நான்கு துப்பாக்கிக்காரர் களும் பெண்கள் போன்று உடை யணிந்து பார்வையாளர்கள் போல வந்ததாக மற்றொரு தகவல் தெரி விக்கிறது. அந்த நால்வரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஈரானில் நடந்த அவ்விரு தாக்குதல்களுக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப் பேற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஈரானின் ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி, “ஈரானை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல்கள் ஈரான் மக்களின் மன உறுதியைப் பாதிக்காது,” என்று கூறியுள்ளார்.

Loading...
Load next