வடகொரியாவின் ஏவுகணை சோதனை

சோல்: வடகொரியா நேற்று கடலை நோக்கி அடுத்தடுத்து ஏவுகணை களை வீசி சோதனை நடத்தியது. நேற்று வீசப்பட்ட ஏவுகணைகள் தரையில் இருந்து கடலில் செல்லும் கப்பலைத் தாக்கி அழிக்கும் வகையைச் சேர்ந்ததாகும். தென் கொரியாவையும் அதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் அணுகுண்டு சோதனை, ஏவுகணைச் சோதனை போன்றவற்றை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. வடகொரியாவின் அத்துமீறல் காரணமாக ஐநா பாதுகாப்பு மன்றமும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் வடகொரியாவுக்கு எதிராக பொருளியல் தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் இதைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று வீசப்பட்ட ஏவு கணைகள் 200 கி.மீட்டர் வரை சென்று கடலில் விழுந்ததாகக் கூறப்பட்டது.

Loading...
Load next