துருக்கியில் ஆர்ப்பாட்டம்

அங்காரா: துருக்கியில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய இருவர் போலிஸ் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் ஆதரவாளர்கள் தெருக்களில் ஒன்றுகூடி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். துருக்கியில் சென்ற ஆண்டு ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் பலரை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அங்காராவில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிசார் தடுத்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தை ஊக்குவித்த இருவர் மே மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. படம்: ஏஎஃப்பி

Loading...
Load next