அந்தமான் கடல் பகுதியில் காணப்பட்ட விமானப் பாகங்கள்

யங்கூன்: விபத்துக்குள்ளான மியன்மார் ராணுவ விமானத்தின் உதிரிப் பாகங்களும் அதில் பயணம் செய்தவர்களின் சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மொத்தம் 122 பேருடன் மாயமாய் மறைந்த விமானத்தின் உதிரிப் பாகங்கள் நேற்று காலை அந்தமான் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவப் பேச்சாளர் கூறினார். ஒன்பது கப்பல்களும் மூன்று விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, புதன்கிழமை மியன்மாரின் தென்பகுதியில் உள்ள ஒரு நகரிலிருந்து யங்கூனுக்குப் புறப்பட்டுச் சென்ற ராணுவ விமானம் பகல் 1 மணியளவில் மாயமாய் மறைந்ததாகவும் அந்த விமானத்தில் சிறுவர்கள் 15 பேர், ராணுவ வீரர்கள் 35 பேர் உட்பட மொத்தம் 120க்கும் அதிகமானோர் இருந்ததாகவும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இதையடுத்து, மாயமான விமானத்தைத் தேடும் பணியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந் திருக்கலாம் என விமானத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

Loading...
Load next