‘குழலி’

‘காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘குழலி’. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் எஸ்தர். இவர் ‘பாபநாசம்’ படத்தில் நடித்தவர். தீனா, ரசாத், ஜானகி ஆகிய புதுமுகங்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் செரா.கலையரசன். பெற்றோர் தம் பிள்ளைகள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பார்கள். பருவங்கள் மாறும் சூழ்நிலையில் அப்பிள்ளைகளின் மனநிலையும் மாறுகிறது. ஒரு கட்டத்தில் பெற்றோருக்கு எதிராகவும் பிள்ளைகளின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அத்தகைய மாற்றத்தை பெற்றோர் ஏற்கிறார்களா என்பதை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்பவும் யதார்த்தமாகவும் படம்பிடித்துள்ளனராம்.