சுடச் சுடச் செய்திகள்

களைகட்டுகிறது விஜய் பிறந்தநாள்

ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி அன்று பொது மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்கள் தொடரும் என ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது. மேலும் விஜய் நடிப்பில் முன்பு வெற்றி நடைபோட்ட சில திரைப்படங்களும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளாக திரையிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவிலும் விஜய்க்கு அதிக அளவு ரசிகர்கள் இருப்பதால் அங்குள்ள விஜய் படங்கள் திரையிடப்படும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டின் சிறப்பம்சமாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல திரையரங்கில் சிறப்புக் காட்சியாக வசூலில் சாதனை படைத்த ‘துப்பாக்கி’ படத்தை திரையிடத் திட்டமிட்டிருப்பதாக விஜய்யின் ரசிகர் மன்றம் சார்பில் இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதப்பதாகக் கேள்வி. விஜய்யும் கூட அனைத்து விவரங்களையும் கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தாராம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon