சுடச் சுடச் செய்திகள்

உதயநிதிக்கு ஜோடியான புது நமீதா

தலைப்பை பார்த்து ஏமாறாதீர்கள். முழுக் கதையையும் படியுங்கள். ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படங்களை முடித்த கையோடு, தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திலீஷ் போத்தன் இயக்கத்தில் பகத் பா‌ஷில் நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘மகே‌ஷின்ட பிரதிகாரம்’.

இப்படத்தின் தமிழ் மறுபதிப்பை இயக்க இருக்கிறார் பிரியதர்ஷன். ‘மூன்‌ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட்’ என்ற நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்கிறார். இந்த தமிழ் மறுபதிப்பில் நடிக்க உதயநிதியை அணுகியுள்ளார் பிரியதர்ஷன். அவரும் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள தாகத் தெரிகிறது. கதாநாயகியாக நடிக்க மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகையும் ‘என் காதல் புதிது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருமான நமீதா பிரமோத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவர் பச்சைக்கொடி காட்டியதும் படப்பிடிப்புக்கான பணிகள் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon