சிங்கப்பூருக்கான நட்புமுறை ஆட்டத்தில் மெஸ்ஸி இல்லை

அடுத்த வாரம் அர்ஜெண்டினாவுடன் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூர் பொருதவிருக்கிறது. அந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸியை நேரடியாகப் பார்க்கலாம் என பல ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவ்வேளையில் அவர்களது எதிர்பார்ப்பை முறியடிக்கும்விதமாக அர்ஜெண்டினாவின் கிளோரின் செய்தித்தாள் வெளியிட்ட செய்தியின்படி மெஸ்ஸி சிங்கப்பூருக்கு வராமலேயே இருக்கக்கூடும். இன்று பிரேசில் அணியுடன் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் விளையாடிவிட்டு மெஸ்ஸி நேரடியாக அர்ஜெட்ணடினாவுக்குத் திரும்புவார் என அர்ஜெண்டினாவின் மிகப்பெரிய செய்தித்தாளான கிளேரின் செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தி உண்மையென்றால் வரும் 13ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் சிங்கப்பூரும் அர்ஜெண்டினாவும் பொருதவுள்ள நட்புமுறை ஆட்டத்தில் மெஸ்ஸி இடம்பெறமாட்டார்.