‘எல்லாப் புத்தகங்களையும் சரிபார்க்க இயலாது’

அரசாங்கம் தேவையான வழி காட்டுதல்களை நடைமுறைப்படுத் தினாலும் அதன்படி அனைத்து புத்தகங் களையும் படித்து சரிபார்ப் பது இயலாத காரியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராகிம் கூறியுள்ளார். ஆனால், தேசிய நூலகத்தில் இளையர்கள் இரவல் பெற்று வாசிப்பதற்காக வைக்கப்பட்ட புத் தங்களில் சர்ச்சிசைக்குரிய மலாய் மொழி புத்தகங்கள் இடம் பெற்றிருந்த விவகாரத்தில் அரசாங்கமும் தேசிய நூலக வாரியமும் தகுந்த படிப்பினையைக் கற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். அந்த புத்தகங்கள் தேசிய நூலகத்திலிருந்து நீக்கப்பட்டு- விட்டதாக அறியப்படுகிறது.

வாசிப்பு விழா 2017ஐ நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த அமைச்சர், சிறார்களுக்கு புத்தக விவகாரத் தில் வாரியம் தனது வழிகாட்டி நடைமுறைகளை பரிசீலனை செய்யுமா என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார். மலாய் மொழியில் சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் சமயம், நாகரிகம், தொல்பொருளியல் என்ற வரிசையில் வெளிவந்த புத்தகங்கள் 2013ஆம் ஆண்டு முதல் தேசிய நூலகத்தின் இளையர் பகுதியில் புதினம் அல்லாத புத்தக வரிசையில் கிடைப்பது குறித்து தி நியூபேப்பர் நாளிதழில் செய்தி வெளி யானது. இதன் தொடர்ச்சியாகவே அமைச்சர் யாக்கூப்பின் கருத்து இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் ‘பெனர்பிட் சி னார் செமர்லாங்’ என்ற பதிப்பு நிறு வனத்தால் அச்சிடப்பட்டிருக்- கும் அந்தப் புத்தகங்களில் யூதர்கள் தவறான கண்ணோட்டத்தில் சித்திரிக்கப்பட்டிருப்பதுடன் அவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவது தவறல்ல என்ற கருத்தைக் கொண்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்